Skip to content Skip to sidebar Skip to footer

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன் ஆர்னல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆனந்தன் ஆர்னல்ட் தற்பொழுது இங்கிலாந்தில் BBK Partnership என்ற பட்டயக் கணக்காளர் (Chartered Accountants) நிறுவனத்தில் மூத்த பங்காளராக (Senior Partner) பணியாற்றி வருகிறார்.

கிரிக்கெட் ஆர்வலரான ஆனந்தன் ஆர்னல்ட் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவராவார்.

சைக்கிளோட்டத்தில் ஈடுபடும் ஆனந்தன், கடந்த நான்கு வருடங்களாக மானிப்பாய் Green Hospital அபிவிருத்திக்காக, “Ride for Ceylon” எனும் 481 கிமி தூரமுள்ள கொழும்பிலிருந்து மானிப்பாய்க்கான நிதி சேகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

அத்துடன், Jaffna Stallions நிறுவனத்தின் கிரிக்கெட் அபிவிருத்திக்கான உப-அதிபராக ( Vice President – Cricket Development) பிருந்தன் பகிரதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம், யாழ்பாணத்தையும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Written by

பூங்குன்றன்

Leave a comment

Go to Top